'நேரு, இந்திரா காந்தி வரிசையில் முன்னேறும் நரேந்திர மோடி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | May 27, 2019 03:07 PM
இந்திய பிரதமர்களில் அதிக காலம் ஆட்சி செய்த பிரதமர்கள் பட்டியலில், நரேந்திர மோடி முன்னேறி வருகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜ.க. 282 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. தற்போது 17-வது மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தொடர்ச்சியாக 2 முறை பிரதமர் ஆன சாதனையை, பா.ஜ. கட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாயும் படைத்தார். ஆனால், அவரது முதல் ஆட்சி ஒரு ஆண்டு 7 மாதங்கள் மட்டுமே நீடித்தது.
இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் தலைமையில் மட்டுமே, ஆட்சி அமைந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தப் பின், 1951-1952-ம் ஆண்டு, 1957-ம் ஆண்டு மற்றும் 1962-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் நேரு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளார்.
1951-ம் ஆண்டு நடந்த தேர்தல் 5 மாதங்கள் அதாவது, 1951-ம் ஆண்டு அக்டோபர் முதல் 1952-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. இத்தேர்தலில், 364 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. 1957-ம் ஆண்டு 371 இடங்களிலும், 1962-ம் ஆண்டு 361 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
1967-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி, 283 இடங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார். 1971-ம் ஆண்டு 352 இடங்களில் வென்று 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றினார் இந்திரா காந்தி. இந்த இரு பிரதமர்களுக்குப் பின் தனிப் பெரும்பான்மை பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறார் நரேந்திர மோடி.