'பதவியேற்பு நிகழ்விலேயே அதகளம்'... 'கைதட்டலுக்கு நடுவே பதவியேற்ற ஒரே எம்.பி.'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jun 18, 2019 04:59 PM

மக்களவையில் அதிமுக எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பதவியேற்றபோது, பாஜக எம்பிக்கள் அவருக்கு கைதட்டி வரவேற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

theni mp ravindranath kumar take oath in tamil at lok sabha

17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமையன்று துவங்கியது. இதையடுத்து புதிய எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகின்றார். இந்நிலையில் இன்று மக்களவையில், தமிழ்நாட்டு எம்பிக்கள் பதவியேற்றனர். திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள், இறுதியாக தமிழ் வாழ்க எனக் கூறினர். இதற்கு பாஜக எம்பிக்கள் பதிலுக்கு பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீ ராம் எனக் கோஷமிட்டனர். 

இதைத் தொடர்ந்து அதிமுகவின் ஒரே எம்பியான ரவீந்திரநாத் குமார் பதவியேற்க வந்தார். தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்ற அவர், எம்ஜிஆர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் எனக் கூறினார். உடனே பாஜக எம்பிக்கள் அனைவரும் அவருக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். 

Tags : #LOKSABHAELECTIONRESULTS2019 #OATH #PARLIAMENT