'அதுக்கு சான்ஸ் இருக்கா?'.. ‘வெய்ட் அண்ட் சீ’..ஸ்டாலின் சொன்ன பஞ்ச் பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 28, 2019 04:03 PM

17வது மக்களவைத் தேர்தலுடனேயே 22 சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. இதில் மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழகத்தில் வேலூர் நீங்கலாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 39 தொகுதிகளில் 38 தொகுதியை திமுக கூட்டணி கைப்பற்றியது. இதன் மூலம் தேசிய அளவில் 3-வது எதிர்க்கட்சி என்கிற அங்கீகாரத்தை ஸ்டாலின் பெற்றுள்ளார்.

\'Wait and See\' DMK leader MK Stalin answers about his next move

இதேபோல் சட்டமன்றத் தேர்தலின் 22 தொகுதிகளில், 13 தொகுதிகளில் திமுகவும், 9 தொகுதிகளில் அதிமுகவும் வென்றன. இந்த நிலையில் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

திமுக மற்றும் அதிமுகவின் இருபெரும் தூண்களாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இல்லாமல் நிகழ்ந்த இந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் திமுக நாடாளுமன்ற தொகுதிகளில் அபாரமாக வென்றதைப் போலவே, சட்டப்பேரவையிலும் 13 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்களால், திமுகவின் பலம் 101 ஆக உயர்ந்துள்ளது.

இது இன்றைய ஆளுங்கட்சியான அதிமுக மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கான வாய்ப்பினை உருவாக்கித் தரும் சூழல் என்பதால், தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதுகுறித்து  பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போது,  நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு திரைப்பட இடைவேளையில் வருவதுபோல, ‘வெய்ட் அண்ட் சீ.. பொறுத்திருந்து பாருங்கள்’ என்று பஞ்ச் பதிலளித்தார்.