‘செல்ல நாயுடன் பொழுதைக் கழிக்கும் ராகுல்..’ வைரலாகும் ‘கார் ரைடு ஃபோட்டோ..’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 29, 2019 11:39 PM

தேர்தல் தோல்விக்குப் பின் கட்சிப் பணிகளில் ஈடுபடாத காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது செல்ல நாயுடன் பொழுதைக் கழிக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Rahul Gandhi takes his pet dog Pidi on a ride photo goes viral

தேர்தல் தோல்விக்குப் பின், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக முன்வந்துள்ள ராகுல் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். குறிப்பிட்ட சிலரைத் தவிர வேறு யாரையும் அவர் சந்திப்பதும் இல்லை. இந்நிலையில் ராகுல் தனது வீட்டிலிருந்து காரில் செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் காரை ராகுலே ஓட்ட, அவருடைய செல்ல நாய் மட்டும் அவருடன் உள்ளது.

பிடி எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நாய், ராகுலுக்கு மிகவும் நெருக்கமானது. பணிகள் இல்லாத நேரங்களில் பிடியுடன் விளையாடி மகிழ்வது ராகுலின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. செல்ல நாய் பிடியுடன் அவர் காரில் செல்லும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

Tags : #LOKSABHAELECTIONS2019 #RAHULGANDHI #PIDI