'அடிக்க மாட்டோம்.. வாங்க'.. 'எத்தன வருஷமா இங்க குடியிருக்கீங்க?'.. அரள விட்ட மலைப்பாம்பு.. பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Nov 20, 2019 03:59 PM

20 KG எடை கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஸ்பாவுக்குள் புகுந்து 10 வருஷமாக குடியிருந்து வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Python Falls through Spas ceiling, living for 10 yrs

சீனாவில் ஸ்பா மையம் ஒன்றில்தான் 13 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு தன்னை சுருட்டிவைத்துக்கொண்டு, அந்த ஸ்பாவின் மேற்கூரையில் கமுக்கமாக இருந்துள்ளது. அதுவும் 10 வருடங்கள் இப்படியே வாழ்ந்துள்ளது இந்த மலைப்பாம்பு என்பதுதான் இந்தில் பதைபதைப்பை ஏற்படுத்திய விவகாரம்.

இதனைக் கண்டுபிடித்த ஸ்பா ஊழியர்கள் அதிர்ச்சி அடைய, அதன் பின்னர்தான், அந்த பில்டிங் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் , 3 வருடங்களுக்கு முன்பே இந்த மலைப்பாம்பினைக் கண்டதாகவும், ஆனால் அதன் பின் அது எங்கே சென்றது என்று தெரியாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தனை பேருக்கும் அள்ளு கிளப்பிய இந்த மலைப்பாம்பினை லாவகமாக பிடித்த வனத்துறை உயிரின மீட்புப் படையினர் பாம்பினை பத்திரமாக காட்டுக்குள் சென்று விட்டனர்.

Tags : #PYTHON #CHINA