'ஒரு லக்னத்தில் ஒன்பது கிரகங்களும்'... உச்சம் பெற்ற ஒருவனாலதான் முடியும்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | May 21, 2019 12:29 PM

ஓடும் பைக்கில் பசு கன்றை முன்னால் அமர வைத்து,இளைஞர் ஒருவர் கொண்டு செல்லும் வீடியோ,ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Pakistani man carries calf in his bike video goes viral

பாகிஸ்தான் நாட்டில் சில இளைஞர்கள் செய்யும் குறும்புகள் மிகவும் பிரபலம்.அது போன்ற குறும்புகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது உண்டு.அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பசு கன்று ஒன்றை முன்னால் அமர வைத்துள்ளார். மேலும் அதனை துணியால் போர்த்தி குழந்தையை அமர வைப்பது போன்று உட்கார வைத்து பைக்கில் கொண்டு செல்கிறார்.

அந்த பசு கன்றும் ஒன்றுமே தெரியாத குழந்தை போன்று,சமத்தாக எந்த வித இடையூறும் செய்யாமல் அமர்ந்துள்ளது.இளைஞர் இவ்வாறு செல்வதை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்துள்ளார்கள்.இது பாதுகாப்பில்லாத பயணம் என்றாலும்,இது போன்ற செயல்கள் எல்லாம் பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம் என ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்கள்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tags : #PAKISTAN #TWITTER #CALF #BIKE