ரெண்டு துண்டாக 'அறுந்து' கிடந்த பெல்ட்... அவ்ளோ 'வெயிட்ட' இது எப்டி தாங்குச்சு?... போலீசாரை குழப்பிய 'பச்சை' குர்தா!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் அவரது இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுஷாந்த் மரணம் தொடர்பாக போலீசார் இதுவரை 27 பேரிடம் விசாரணை நடத்தி அவற்றை பதிவு செய்துள்ளனர்.
![Police to further investigate on whether actor was really hung by kurt Police to further investigate on whether actor was really hung by kurt](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/police-to-further-investigate-on-whether-actor-was-really-hung-by-kurt.jpg)
இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையில் சுஷாந்த் சிங் மூச்சுத்திணறி இறந்தை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணத்தில் போலீசாருக்கு ஒருசில குழப்பங்கள் தற்போது ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மரணத்துக்கு பின் அவரது அறையில் பாத்ரோபின் பெல்ட் ஒன்று இரண்டாக அறுந்து கிடந்துள்ளது.
இதனால் முதலில் தற்கொலை செய்ய அந்த பெல்ட்டை அவர் எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் பச்சை நிறத்திலான குர்தா ஒன்றில் அவர் தூக்குப்போட்டு உள்ளார். ஆஜானுபாகுவான சுஷாந்த் சிங்கின் எடையை அந்த குர்தா எப்படி தாங்கியது? என்ற கேள்வி போலீசார் மத்தியில் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த குர்தாவை தடயவியல் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
ஆய்வக முடிவு வெளியானால் தான் சுஷாந்த் அந்த பச்சை குர்தாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? இல்லையா? என்பது தெரிய வரும். சுஷாந்த் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை என்பதால் இந்த வழக்கில் போலீசார் மேலும் பல கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)