தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட... 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு!.. பிரதமர் மோடியின் கேபினட் 2.0 பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் 11 பெண்கள் உள்பட 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி 2வது முறையாக பதவி ஏற்ற பிறகு மத்திய அமைச்சரவை முதன்முதலாக இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. முன்னதாக புதிய மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்க இருக்கும் 43 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தமிழக பாஜக தலைவராக இருக்கும் எல்.முருகன் பெயரும் இடம்பெற்றிருந்ததை அடுத்து, அவரும் மத்திய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
காங்கிரசில் இருந்து பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, அசாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால், மூத்த தலைவர்கள், நாராயண ரானே மற்றும் லோக் ஜனசக்தியை சேர்ந்த பசுபதி குமார் பராஸ் உள்ளிட்டோரும் அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அப்னா தளத்தை சேர்ந்த அனு பிரியா பட்டேல், மீனாட்சி லேகி உள்ளிட்ட 11 பெண்களும் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர். அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதை முன்னிட்டு, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
முன்னதாக பிரதமர் இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, முக்கிய மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் உள்ளிட்டோருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

மற்ற செய்திகள்
