முதலமைச்சராகும் ஸ்டாலினுக்கு என்னென்ன துறைகள்?.. சுகாதாரத்துறை யாருக்கு?.. முக்கிய இலாகா விவரங்கள் இதோ!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதிதாக பொறுப்பேற்கவுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்கள் கொண்ட தமிழக அமைச்சரவைப் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதில், உதயசூரியன் சின்னத்தில் நின்ற வேட்பாளர்கள் மட்டுமே 133 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில், நாளை (7.5.2021) ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். அவர் இந்திய ஆட்சிப்பணி, உள்துறை, காவல் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்தை கவனிக்கவுள்ளார்.
அமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு:-
1. மு.க.ஸ்டாலின் - முதலமைச்சர்
2. துரைமுருகன் - நீர்வளத்துறை
3. கே.என்.நேரு - நகர்ப்புற வளர்ச்சித் துறை
4. இ.பெரியசாமி - கூட்டுறவுத் துறை
5. க.பொன்முடி - உயர்கல்வித் துறை
6. எ.வ.வேலு - பொதுப்பணித் துறை
7. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மை, உழவர் நலத்துறை
8. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
9. தங்கம் தென்னரசு - தொழில்துறை
10. எஸ்.இரகுபதி - சட்டத் துறை
11. சு.முத்துசாமி - வீட்டு வசதித்துறை
12. கே.ஆர்.பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சி துறை
13. தா.மோ.அன்பரசன் - ஊரக தொழிற் துறை
14. மு.பெ.சாமிநாதன் - செய்தித்துறை
15. பி.கீதா ஜீவன் - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
16. அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளம், மீனவர் நலத்துறை மர்றும் கால்நடை பராமரிப்புத்துறை
17. ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - போக்குவரத்து துறை
18. கா.ராமச்சந்திரன் - வனத்துறை
19. அர.சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை
20. வி.செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
21. ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை
22. மா.சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
23. பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை
24. எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
25. பி.கே.சேகர் பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை
26. பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை
27. சா.மு.நாசர் - பால்வளத்துறை
28. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மர்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
29. அன்பில் மகேஸ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை
30. சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச்சூழல், கால நிலைமாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை
31. சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன்
32. த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை
33. மா.மதிவேந்தன் - சுற்றுலாத்துறை
34. என்.கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை

மற்ற செய்திகள்
