பூதாகரமான லட்சத்தீவு விவகாரம்!.. மௌனம் கலைத்த முதல்வர் ஸ்டாலின்!.. என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?
முகப்பு > செய்திகள் > இந்தியாலட்சத்தீவு சர்ச்சை குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து பேசு பொருளாக மாறியுள்ளது.
லட்சத்தீவில் மதுபானங்களை அனுமதிப்பது, மாட்டிறைச்சிக்கான தடை, குண்டர் சட்டம், நிலத்தின் உபயோகத்தில் மாற்றங்கள் போன்ற நிர்வாக அதிகாரியின் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களிடையே போராட்டம் மற்றும் எதிர்ப்புகள் கிளம்பிவருகிறது.
இதற்கு கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இதனை மத்திய அரசு கவனித்து பரிசீலனை செய்துவருகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். அதில், நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா படேல் மக்கள் விரோத சட்டங்களை வலுக்கட்டாயமாக திணிக்கிறார்.
லட்சத்தீவில் வாழும் இஸ்லாமியர்களை அந்நியபப்டுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. பிரதமர் மோடி தலையிட்டு புதிய சட்டங்களை திரும்பப் பெறவேண்டும்; பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம் என்று கூறியுள்ளார்.
#Lakshadweep-இல் திரு. பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இசுலாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது.@PMOIndia தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும்.
பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்!
— M.K.Stalin (@mkstalin) May 27, 2021