“வீடு.. உணவின்றி தெருக்களில் தவிச்சோம்!”.. ‘நியூஸிலாந்து’ பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னின்’ கேபினெட்டில் எம்.பியாக இடம்பெற்ற ‘இந்தியர்’ கௌரவ் ஷர்மா!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 20, 2020 07:26 PM

பாதுகாப்பு விதிமுறைகளோடு கொரோனா காலத்திலும் நியூசிலாந்து பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. அதிலும் இரண்டாவது முறையாக தொழிலாளர் கட்சியின் ஜெசிந்தா ஆர்டர்ன் வெற்றிபெற்று, பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார்.

once homeless migrabnt gaurav sharma, an Indian now New Zealand MP

அதே தொழிலாளர் கட்சியின் சார்பாக நியூசிலாந்தின் மேற்கு ஹாமில்டன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்தான், 33 வயதான டாக்டர் கெளரவ் ஷர்மா எனும் இந்தியர். 1987-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ம் தேதி கெளரவ் ஷர்மா இமாச்சலப்பிரதேசத்தின் ஹமீர்பூரிலுள்ள காலோட்டில் பிறந்தவர் இவர்.  அரசு மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்தவர் இவரது தந்தை கிர்தர் ஷர்மா. தாயார் பூர்ணிமா ஷர்மா இல்லத்தரசி. இவர்களின் ஒரே மகன் கெளரவ் ஷர்மா. 20 ஆண்டுகளுக்கு முன்னர், தன் தந்தையின் தொழில் நிமித்தமாக குடும்பத்தோடு நியூசிலாந்தில் குடியேறினார்.

இதுகுறித்து கெளரவ் ஷர்மா கூறுகையில், “1996-ம் ஆண்டு என் தந்தை சுயதொழில் தொடங்கும் நோக்கத்தால், விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர், வெறும் 250 டாலருடன் நியூசிலாந்துக்கு வந்து 6 ஆறு வருடங்களுக்கு என் தந்தைக்கு சார்ந்த வேலை எதுவும் கிடைக்காததால், நியூசிலாந்து தெருக்களில் தனியாக மிகவும் சிரமப்பட்டோம்.  உணவின்றி, தங்க வீடின்றி கூட தவித்திருக்கிறோம்.  நியூசிலாந்தின் ஆக்லாந்து தொண்டு நிறுவன உறுப்பினர்கள்தான் எங்களுக்கு பெரிதும் உறுதுணையாக நின்றவர்கள். அவர்கள் பணி மகத்தானது. அதனால், இந்த சமூகத்துக்காக நான் பணிபுரிவது எனது தலையாய கடமை” என்று கூறியிருக்கிறார்.

நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சியில் 2014-ம் ஆண்டு அடிப்படை உறுப்பினராக இணைந்த கௌரவ் ஷர்மா, படிப்படியாக படித்துயர்ந்து, அந்தக் கட்சியின் சார்பில் தற்போது நாடாளுமன்ற வேட்பாளராகி, எம்.பி-யாகவும் வெற்றி பெற்றிருக்கிறார். முன்னதாக ஆக்லாந்து மருத்துவக் கல்லூரியில் மருத்துவ இளங்கலைப் பட்டம் பெற்ற கௌரவ் ஷர்மா, வாஷிங்டன் டி.சியிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற கெளரவ் ஷர்மா, தனது வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் என இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பாராட்டி பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Once homeless migrabnt gaurav sharma, an Indian now New Zealand MP | India News.