போர் தொடரும்...! 'பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிரதமரின் ஏழாவது உரை...' - என்ன பேசினார்...?
முகப்பு > செய்திகள் > இந்தியாபெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், கொரோனா காலத்தில் இதுவரை 6 முறை உரையாற்ற்றிய பிரதமர் மோடி ஏழாவது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
உரையின் போது பேசுகையில், "கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவாக போராடி வருகிறதாக தெரிவித்தார். ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாட்டு மக்கள் வீடுகளில் இருந்து தற்போது வெளியே வரத் தொடங்கி உள்ளனர்.
மேலும், நாட்டின் நிலைமை ஸ்திரதன்மையோடு இருப்பதாக தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் படிபடியாக மேம்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
நாடு கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருவதாக தெரிவித்த பிரதமர், கொரோனா பாதிப்பு குறைந்தாலும், ஆபத்து இன்னமும் முழுமையாக நீங்கவில்லை, மேலும் அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
கொரோனா நோயாளிகளுக்காக 90 லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. வெளிநாடுகளை விட இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது. மக்களை காக்கும் முயற்சியில் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது. மேலும், கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருந்து விடக்கூடாது
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் புறக்கணிக்க கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும். வீடுகளில் இருந்து வெளியே வருவோர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே வருவது அவர்களின் குடும்பத்திற்கே ஆபத்தாக முடியும்
பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கி உள்ளது. கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக பல நாடுகள் போராடத் தொடங்கி உள்ளன.
தடுப்பூசி கண்டறியப்பட்டு, வினியோகிக்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும் என்று தெரிவித்தார்.
உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டறிவதில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தியாவும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தடுப்பூசியை கொண்டு சேர்ப்பதே அரசின் இலக்கு ஆகும். இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் அயராது ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசியை மக்களுக்கு வினியோகிக்க தேவையான திட்டத்தை அரசு வடிவமைத்துள்ளது. பல தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளன.
நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுவே முக்கியம் ஆகும். பண்டிகை காலம் என்பது மகிழ்ச்சிக்கு உரியது. ஆனால் அதே நேரத்தில் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு உரையில் பிரதமர் பேசினார்.