'வயசான காலத்துல ஏன் பஸ்ல போய் கஷ்ட படுறீங்க...' 'பாட்டிகள் தான் மெயின் டார்கெட்...' - ஆட்டோல ஏறிட்டா நேக்கா பிளானை நிறைவேத்திடுவாங்க...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்து தங்க நகைகளை கொள்ளையடிக்கும் 7 பெண்களை வடசென்னை போலீசார் பொறி வைத்து பிடித்த சம்பவம் அனைவரையில் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்யும் வயதானவர்களை குறிவைத்து தங்கநகைகள் கொள்ளையடிக்கப்படுவதாக எழுந்த தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்துள்ளது. எனவே கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலின் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சாமிநாதன் அறிவுரைப்படி வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர், திருவொற்றியூர் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மேற்பார்வையில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மேலும் தங்கநகைகள் காணவில்லை என புகார் அளித்த நபர்களை விசாரிக்கையில், ஆட்டோவில் வந்த பெண்மணிகள் நைசாக பேசி, கவனத்தை திருப்பி தங்க நகைகளை கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்திலும் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் சுடிதார் மற்றும் சேலை அணிந்த பெண்கள் ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. ஆட்டோவின் பதிவு நம்பர் அடிப்படையில் டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். அந்தப் பெண்கள் குறித்து டிரைவருக்கு எதுவும் தெரியவில்லை.
அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், சென்னையிலுள்ள முக்கியப் பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் காலை முதல் இரவு வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு தனிப்படையிலுள்ள ஒவ்வொரு போலீசாரின் செல்போனிலும் சம்பந்தப்பட்ட பெண்களின் சிசிடிவியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருந்தன.
மேலும் அந்த 4 பெண்களுக்கு திருவொற்றியூர் டோல்கேட் ஆட்டோவிலிருந்து இறங்கி வருவதை காவல்துறையினர் பார்த்தனர். உடனடியாக அவர்களைப் பிடித்த போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள்தான் மூதாட்டிகளிடம் தங்கச் செயின்களைப் பறித்தது தெரியவந்தது.
விசாரணையில் போலீசாரிடம் சிக்கிய 4 பெண்கள் மட்டுமல்லாமல் இன்னும் 3 பெண்கள் என கூட்டாக இணைந்து இரு குழுக்களாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டதும், இந்த பெண்களில் ஒருவர் ஆட்டோ டிரைவர் பக்கத்தில் அமர்ந்து அவரிடம் பேச்சு கொடுத்து அவரின் கவனத்தை திருப்பி, பஸ்சுக்காக காத்திருக்கும் பாட்டிமார்களை நைசாக பேசி ஆட்டோவில் ஏற்றி, பின்னால் உட்காரும் இரு பெண் அருகில் அமரும் மூதாட்டியிடம் அன்பாக பேசி அவர்களின் தங்க நகைகளை திருடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும், ராணி, ராஜாமணி, திலகா, மரியா, இசக்கியம்மாள், உஷா, லட்சுமி ஆகியோர் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பஸ் மூலம் வரும் இந்தப் பெண்கள், சென்னையில் சில மாதங்கள் தங்கி இம்மாதிரியான கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த ஏழ்வரும், ராணி தலைமையில் ஒரு குழுவாகவும், இசக்கியம்மாள் தலைமையில் இன்னொரு குழுவாகவும் பிரிந்து சென்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவிடம் இதுவரை தாலி செயின், தங்க செயின்கள் என சுமார் 200கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.