legend updated

கர்நாடகாவிற்கு புதிய முதல்வர்.. பதவியேற்றார் பாஜகவின் 'எடியூரப்பா'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 26, 2019 07:17 PM

கர்நாடகாவின் முதலமைச்சராக, 4வது முறையாக பதவியேற்றுள்ளார். அவருக்கு அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.

On behalf of BJP, Yeddyurappa to take oath as Karnataka CM

முன்னதாக இருந்த காங்கிரஸ் -மஜத கூட்டணி ஆட்சியின் தலைமையில் முதல்வராக இருந்த  குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நிகழ்ந்தது. தாம் பதவி விலகத் தயார் என்று சட்டப்பேரவையில், முதல்வர் குமாரசாமி உருக்கமாக பேசவும் செய்தார்.

அதன் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.  எனினும் இறுதியில் பெரும்பான்மையை இழந்து 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாராசமி அரசு 99 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது.  காரணம், குமாரசாமியின் ஆட்சியை எதிர்த்து 105 வாக்குகள் பதிவான நிலையில், காங்கிரஸ் -மஜத ஆட்சி கவிழ்ந்தது.

இந்த நிலையில், பாஜக மாநில செயலாளராக இருந்த எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.

Tags : #KARNATAKA #CHIEFMINISTER #YEDDYURAPPA