"பேராண்டி.. நீ போய் BALL-அ போடு.." BAT-ம் கையுமாக தூள் கிளப்பும் 'தாத்தா'.. இவருக்கு வயசாகல!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jan 19, 2022 08:22 PM

வயதான முதியவர் கிரிக்கெட் ஆடும் வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

old man playing cricket like youth video gone viral

ஒரு மனிதருக்கு வயது ஆனாலே, அவரால் இனி எதுவும் முடியாது என்ற ஒரு எண்ணம் நம் அனைவருக்கும் வந்து விடுகிறது.

அவர்களுடைய இறுதி காலங்களில், எங்கும் செல்லாமல், ஒரே இடத்தில் இருந்து கொண்டு நாட்களை செலவழிப்பதே சிறந்ததாகும் என்றும் பலர் கூறுவார்கள்.

ஆனால், வயது என்பது ஒரு தடையல்ல என்பதைக் கடந்து, நிறைய பேர், பல விதமான செயல்களில் ஈடுபட்டு சாதனை புரிந்தும் வருகின்றனர். சாதனைகளுடன் மட்டுமில்லாமல், தூர இடங்கள் பயணம் செய்வது, மனதுக்கு தோன்றும் செயல்களை ரசனையுடன் செய்வது என்பதிலும், முதியோர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி வயதான ஒரு முதியவர், லூட்டி அடிக்கும் வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் போட்டி என்றால், ஆறு முதல் அறுபது வயது வரை உள்ள ஆட்கள் கூட ரசிப்பார்கள். ஆனால், இந்த முதியவரோ, போட்டியை ரசிப்பதை விட்டு விட்டு, களத்தில் இறங்கி பேட் எடுத்து லூட்டியும் அடித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவில், அந்த முதியவர் பேட்டைக் கையில் வைத்துக் கொண்டு, பந்தினை வேகமாக அடிக்கிறார். தொடர்ந்து, ஏதோ சிறுவன்  போல, துள்ளிக் குதித்து ரன் ஓடவும் செய்கிறார். அந்த முதியவரைச் சுற்றி அதிக ஆட்களும் இருக்க, தனது செயல்பாட்டில் கூட, எங்கும் முதுமை தெரியவில்லை.

 

 

இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இவருக்கு வயதே ஆகவில்லை போலிருக்கிறது என்றும், இன்னும் இளமையாக தான் இருக்கிறார் என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags : #VIRAL VIDEO #OLD MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Old man playing cricket like youth video gone viral | India News.