'போர் போட்ட இடத்துல தண்ணி வரல...' தண்ணிக்கு பதில் பயங்கர சத்தமா 'இது'தான் வந்திருக்கு...! அதிர்ச்சியில் பொதுமக்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதண்ணிர் வராத போர்வெல் பைப்பை மாற்றியமைக்கும் போது அதிலிருந்து மிகுந்த சத்தத்துடன் கேஸ் வாயு வெளிவந்த சம்பவம் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் எல்ஜி பாலிமர் தொழிற்சாலையில் விஷவாயு வெளியேறி மக்களின் உயிரைப் பறித்து மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. அந்த சம்பவமே நினைவுகளில் இருந்து மறையாத சூழலில் தற்போது ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் பழைய போர்வெல் பைப்பை மாற்றும் போது எரிவாய்வு (கேஸ்) பலத்த சத்தத்துடன் வெளியேறியுள்ளது.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேமவரம் கிராமத்தை சேர்ந்த நாகேஸ்வரராவ் பல ஆண்டுகளுக்கு முன்பு தன் வீட்டின் வாசலில் தண்ணீருக்காக போர்வெல் பைப்பை உண்டாக்கியுள்ளார். அதன் பின் போர்வெல் பைப்பில் தண்ணீர் வராததால் அதை சில ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது போர்வெல் பைப்பை மாற்றும் பணியை மேற்கொண்டார். இதற்காகப் பூமிக்கு அடியில் உள்ள பைப்புகளை எடுத்து புதிய பைப்புகள் பொருத்தும் பணியை மேற்கொண்டனர்.
பழைய பைப்பை எடுக்கும் போது தீடீரென ஓட்டை வழியாக பலத்த சப்தத்துடன் எரிவாயு (கேஸ்) வெளியானது. அதை கேட்ட அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர். மேலும் அப்பகுதியின் ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் பூமியில் இருந்து வெளிவரும் எரிவாயு மக்களை பாதிக்காமல் இருப்பதற்கு ஊர் மக்களை வேறொரு இடத்திற்கு அப்புறப்படுத்தினர். மேலும் எரிவாயு கசிவைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர்.
தீடீரென பூமியில் இருந்து எரிவாயு வெளிவந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
