கணவரை சுட்டுக் கொன்றதுடன்.. ரூமையே தீவைத்து கொளுத்திய பெண்.. ஒரு கிராமத்தையே நடுங்கவைத்த 'பரபரப்பு' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 01, 2020 05:38 PM

ஒரு முறை திருமணம் செய்து விவாகரத்து ஆகிய நிலையில் ஆல்பெர்ட்டாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.

wife shoots drug addict husband and sets fire on his room

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பெண் தன் கணவர் Kevin Feland-ஐ சுட்டுக் கொன்றதுடன் அவர் இருந்த அறையை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுபற்றி விசாரித்தபோது Kevin-உடன் சேர்ந்து வாழ முடிவு செய்த கொஞ்ச நாளில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததாகவும் பின்னர் சீக்கிரமே போதைக்கு அடிமையாகி தான் அடிக்கடி வாக்குவாதம் இருந்ததாகவும் Deborah Doonanco குறிப்பிட்டுள்ளார்.

அப்படி ஒருநாள் குடிபோதையில் வந்து வாக்குவாதம் செய்த Kevin துப்பாக்கியை எடுத்து நீட்டி தன்னை மிரட்டியதாகவும் அப்போது தன் கணவர் எப்படியும் தன்னை கொன்று விடுவார் என்று பயந்த Deborah வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து Kevin-ஐ சுட்டுக் கொன்று விட்டு அந்த அறையை தீவைத்துக் கொளுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு நல்ல ஆசிரியராக இருந்த Deborah-வை Kevin அடித்து உதைத்து உடல் மற்றும் மன ரீதியாக மிகவும் துன்புறுத்தியதுதான், இன்று அவர் குற்றவாளியாக நிற்பதற்கான காரணம் என அந்த கிராமத்து மக்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். எனினும் Kevin குடும்பத்தினர் அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள், அவளிடமிருந்து தந்தையை பிரிக்க Deborahவுக்கு உரிமை இல்லை என்று வாதம் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் Deborahவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wife shoots drug addict husband and sets fire on his room | Tamil Nadu News.