“பக்கத்து வீட்டு அண்ணாக்கள்” என நம்பி பழகிய சிறுமி.. வெளிமாநிலத்து இளைஞர்கள் மாதக்கணக்கில் அரங்கேற்றிய கொடூரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் கேரள மாநிலத்தில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 3 பேர் கைதாகியுள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர் அடிக்கடி சோர்வுடன் காணப்பட்ட நிலையில் சந்தேகப்பட்ட ஆசிரியர்கள் மாணவியை அழைத்து தனிப்பட்ட ஆலோசனை வழங்குதல் அமர்வு ஒன்றை மேற்கொண்டனர். உரிய நிபுணர்களுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த அமர்வில் மாணவி தனக்கு நடந்ததாக கூறிய தகவல்கள் ஆசிரியர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது மட்டுமின்றி இவ்விவகாரம் தொடர்பாக வெளிமாநில இளைஞர்கள் 3 பேர் கைதாகி உள்ளனர்.
தமது தாயார் இறந்து போன பின்னர் வேறு குடும்பத்தினரின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த சிறுமி குடியிருப்பில் தனியாக இருக்கும் வேலைகளில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த வெளி மாநில இளைஞர்கள் சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் குடியிருப்பில் யாரும் இல்லாத நிலையில் சிறுமியை அணுகிய இளைஞர்கள் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி உள்ளனர். அதுமட்டுமன்றி சிறுமியை நகரின் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்றும் பலரின் பாலியல் வன்கொடுமைக்கும் இரையாக்கியுளனர்.
இதனிடையே சிறுமி கடந்த சில நாட்களாக சோர்வாக இருந்ததை கவனித்த ஆசிரியர்கள் எடுத்த முன்னெடுப்பின் காரணமாக சிறுமிக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை அடுத்து போலீசாருக்கு ஆசிரியர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் சிறுமி முறையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் சிறுமி ஒன்றரை மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இவ்வழக்கில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேர் மாயமான நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
