"அம்மாடியோவ்... இதுல கொஞ்சம் கூட உண்மையில்லை ..." கடைசில 'ரயில் டிக்கெட்' காசை... நாங்கதான் 'கொடுத்தோம்...' 'மகாராஷ்டிரா' உள்துறை அமைச்சர் கடும் 'குற்றச்சாட்டு...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | May 19, 2020 11:25 AM

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் பயணத்துக்கான செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது உண்மைக்கு மாறான தகவல் என்று மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் குற்றம்சாட்டியுள்ளார்.

Nirmala Sitharaman\'s statement is contrary to fact-maha minister

வெளிமாநிலங்களில் சிக்கியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாகவும் எஞ்சிய 15 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கூறியிருந்தார்.

ஆனால், இது உண்மைக்கு மாறான தகவல் என்று மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து குறிப்பிட்டுள்ள அவர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்திற்கான செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்து போனேன். அவர் கூறியதில் உண்மையில்லை. இது உண்மைக்கு மாறானது. மகாராஷ்டிராவில் இருந்து இதுவரை சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்களில் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முழு டிக்கெட் கட்டணத்தையும் மாநில அரசுதான் செலுத்தியுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்த புலம்பெயர்  தொழிலாளர்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று ரயில்வேயிடம் மகாராஷ்டிரா அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், அந்த வேண்டுகோளை ரயில்வே ஏற்க மறுத்துவிட்டது. அதன்பிறகு டிக்கெட் கட்டணச் செலவு முழுவதையும் மகாராஷ்டிரா அரசு ஏற்றுக் கொண்டது" எனக் கூறினார்.

சுமார் 20 லட்சம் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.