‘எனக்கு கொரோனா தொற்று இல்லை’.. ‘டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க’.. ஆதாரத்துடன் வெளியிட்ட அமைச்சர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 15, 2020 02:16 PM

மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஜிதேந்திர அவ்காத் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Maharashtra Minister Jitendra Awhad releases his COVID19 test report

மகாராஷ்டிரா மாநிலத்தின் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்காத்துக்கு கொரோனா தொற்று இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அது உண்மை இல்லை என்று கொரோனா பரிசோதனை செய்த டெஸ்ட் ரிசல்ட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தான் முழு உடல்தகுதியுடன் இருப்பதாகவும், தெருவில் இறங்கி பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளிட்டு விட்டதாகவும், கொரோனாவுக்கு எதிரான போரில் இறங்கி களப்பணியாற்ற உள்ளதாகவும் அமைச்சர் ஜிதேந்திர அவ்காத் குறிப்பிட்டுள்ளார்.