“3 மாசத்துக்கு.. இலவச சிலிண்டர்.. ஜன்தன் கணக்கில் ரூ.500”.. “ஏழைகளுக்கு ரூ.1.70 லட்சம் கோடி நிதி!”.. நிரமலா சீதாராமனின் மேலும் பல அறிவிப்புகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 26, 2020 02:54 PM

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை இந்திய பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் மக்கள் பெரும்பாலானோர் வருமானம் உள்ளிட்ட பல சிக்கல்களை சந்திக்க சந்தித்து வருவதாகக் கூறி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளை வெளியிட்டுள்ளார்.

nirmala sitharaman new announce corona relief package for poor

அதன்படி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தவிர, ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடியும், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடும் அறிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தரப்படும் ரூ.6 ஆயிரத்தில் ரூ.2 ஆயிரம் முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்க்கப்படுவதாகவும், ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு 3 மாதத்துக்கு தலா ரூ.500 வழங்கப்படும் என்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக ரூ.200 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதேபோல் 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை, பருப்பு முதலானவை 3 மாத்துக்கு கூடுதலாக வழங்கப்படும் என்று இணை நிதி அமைச்சர் அனுராக் தக்கூர் தெரிவித்துள்ளார். 

Tags : #NIRMALASITHARAMAN #INDIAVSCORONA #CORONAVIRUSLOCKDOWN #CORONAINDIA