'நிர்பலாவா?'.. யார் சொன்னது?.. 'நான் சப்லா.. நான் மட்டுமில்ல..'.. 'கொதித்தெழுந்த நிர்மலா சீதாராமன்!'
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Dec 04, 2019 03:52 PM
தன்னை பலமில்லாதவர் என்று குறிப்பிட்டு, தம் மீது வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலாதேவி அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மையில் மக்களவையில் நிறைவேறிய கார்ப்பரேட் வரிச்சட்டங்கள் திருத்த மசோதாவில் கார்ப்பரேட்டுகளுக்கு வரியைக் குறைத்து, ஏழைகளுக்கு வரியை அதிகரித்துவிட்டதாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அளிக்கும் அளவுக்குதான் நிதி அமைச்சருக்கு பலம் இருப்பதாகவும் விமர்சித்துள்ள மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘இப்போது அவர் நிர்மலா இல்லை, நிர்பலா (பலமில்லாதவர்)’ என்று கிண்டல் செய்தார்.
இதை மறுத்த நிர்மலா சீதாராமன், தானும் தன்னைப் போன்ற பாஜக அமைச்சர்களும் இன்னும் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும், தங்கள் அரசு ஏற்கக் கூடிய அளவிற்கு சுதந்திரமாகவே பணியாற்றுவதாகவும், கலந்தோசித்தலில் இருக்கும் நிறை, குறைகளின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் மக்களின் நலன் கருதியே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படுவதாகவும் பேசிய நிர்மலா சீதாராமன், தான் நிர்பலா (பலமில்லாதவர்) அல்ல, சப்லா (பலம் மிக்கவர்) என்றும் தான் மட்டுமல்ல அனைத்து பாஜக பெண்களுமே சப்லாதான் என்று அவர் பதில் அளித்தார்.