‘சிஆர்பிஎப் வீரர் தாயின் காலைத் தொட்டு வணங்கிய நிர்மலா சீதாராமன்’.. நெகிழ வைக்கும் வீடியோ காட்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 05, 2019 12:15 AM

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் தாயின் காலில் விழுந்து வணங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Nirmala Sitharaman touches feet Of dead soldier\'s mother at army event

கடந்த பிப்ரவரி 14 -ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்தின் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த ஆதில் என்ற தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 -க்கும் அதிகமான துணை ராணுவப்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை அடுத்து இந்திய விமானப்படை பதிலடி தாக்குதலைக் கொடுத்தது. இதில் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் சுமார் 1000 கிலோ அளவுள்ள வெடிகுண்டுகளை, காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பால்கோட் என்னுமிடத்தில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய ராணுவம் வீசியது. இதற்கிடையே காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சில ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இன்று(04.03.2019) உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிஆர்பிஎப் வீரர் தாயில் காலில் விழுந்து வணங்கியது அனைவரையும் நெகிழ செய்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #PULWAMAMARTYRS #NIRMALASITHARAMAN #CRPF #VIRALVIDEO