டெல்லியில் போட்டியிட்ட ‘முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர்’ நிலை என்ன..? மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | May 23, 2019 12:01 PM
கிழக்கு டெல்லியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

அவருக்கு போட்டியாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதிஷியும், காங்கிரஸ் சார்பில் அரவிந்தர் சிங்கும் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களின் போதே கம்பீர் பல சர்ச்சைகளில் சிக்கினார். ஆம் ஆத்மியின் அதிஷியைப் பற்றிய தவறான செய்திகளைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாக பாஜக இவர் மீது குற்றம் சாட்டியிருந்தது. கடும் வெயில் காரணமாக பிரச்சாரத்திற்கு தன்னைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவரை பணியமர்த்தியதாகவும், இரண்டு வாக்காளர் அட்டை வைத்திருந்ததாகவும் கௌதம் கம்பீர் மீது சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் கௌதம் கம்பீர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
Tags : #LOKSABHAELECTIONRESULTS2019 #ELECTIONRESULTS2019 #VOTECOUNTING
