'அதிகரிக்கும் கொரோனா'... 'இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு'... அதிரடியாக அறிவித்த மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா பரவலில் டாப் லிஸ்ட்டில் இருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் புதிதாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸின் புதியவகை வடிவம் குறித்து விவாதிக்க மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட கூட்டு கண்காணிப்புக் குழுவின் அவசரக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், புதிய கொரோனா வைரஸ் குறித்து அரசு முழுமையான எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளையும் இன்று முதல் 31-ஆம் தேதி வரை 7 நாட்கள் தனிமைப்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்திலும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் ஜனவரி 5ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மகாராஷ்டிரா வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
