"இதுக்காக இன்னும் எத்தன நாள் ஒப்பாரி வெப்பாரு?".. 'க்ரைம் பிராஞ்சுக்கு மாறிய வழக்கு!'.. கங்கணா ஆவேச ட்வீட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகை கங்கணா ரணவத்தும், நடிகர் ஹிருத்திக் ரோஷனும் நெருங்கி பழகி வந்ததுடன், லிவிங் டு கெதரில் இருந்து வந்ததாக ஒருமுறை கங்கணா தெரிவிக்க, இதை ஹிருத்திக் மறுக்க, இருவரும் எதிரெதிர் துருவங்களாக மாறிவிட்டனர்.

அத்துடன் தன்னை பின் தொடரும் யாரோ ஒரு நபர் ஆள் மாறாட்டம் செய்வதாகவும், அவர்தான் கங்கணாவுடன் தன்னை போல் பேசியதாகவும் 2016ல் புகார் அளிக்க, அதை கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட இழுபறியை அடுத்து, 2017ல் கங்கணா மீதே தனக்கு சந்தேகம் இருப்பதாக ஹிருத்திக் புகார் அளித்தார். இந்நிலையில் தான் ஹிருத்திக் ரோஷனின் வழக்கறிஞர் ஒரு மனு அளித்தார். அந்த மனுவை ஏற்று இந்த வழக்கு தற்போது மும்பை போலீஸாரிடம் இருந்து க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியானதும், இதை அறிந்த கங்கணா, ‘ஹிருத்திக்கின் விவாகரத்துக்கும்,எங்கள் பிரேக் அப்புக்கும் பிறகு இத்தனை வருடங்கள் கழித்தும், ஹிருத்திக்கின் இரக்கம் தேடும் இன்னொரு கதை தொடங்கியுள்ளது.
His sob story starts again, so many years since our break up and his divorce but he refuses to move on, refuses to date any woman, just when I gather courage to find some hope in my personal life he starts the same drama again, @iHrithik kab tak royega ek chote se affair keliye? https://t.co/qh6pYkpsIP
— Kangana Ranaut (@KanganaTeam) December 14, 2020
ஆனால் அடுத்த கட்டத்துக்கு நகர இன்னொரு பெண்ணுடன் பழகவும் மறுக்கும் அவர், போனால் போகட்டும் என்று எனது சொந்த வாழ்க்கையில் கொஞ்சம் நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு கொஞ்சம் தைரியத்தை சம்பாதிக்க எண்ணினால், அதற்குள் இப்படி ஒரு நாடகத்தை நடத்துகிறார். ஒரு சிறிய விவகாரத்துக்காக எத்தனை நாள் இவர் இப்படி ஒப்பாரி வைப்பார்?” என ட்வீட் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
