'ஒரு பக்கம் படிப்பு, மறுபக்கம் பேட்மிண்டன்'... 'அசத்தும் மாளவிகா'... வெற்றி சீக்ரெட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகளின் பேட்மிண்டன் திறமைக்கு உதவுவதற்காக, தாய் விளையாட்டு அறிவியலில் பட்டப் படிப்பு முடித்து பக்கபலமாக இருப்பதால், வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருகிறார் இந்த இளம் வீராங்கனை.

மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்சோத் தனது குழந்தை பருவத்தில் பல விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்தினார்.
பின் அவரின் பெற்றொர், அவரின் உடல்திறனை மேம்படுத்த ஏதேனும் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்த கூறினர். எட்டு வயது பன்சோத் பேட்மிண்டனை தேர்வு செய்தார்.
அவரின் தாய், தந்தை இருவரும் அவருக்கு பக்கபலமாக இருந்தனர். அவரின் பயிற்சிக்கு தேவையானவற்றை வழங்கி, மனதளவில் நம்பிக்கை பெறவும் உறுதுணையாக இருந்தனர்.
அதேபோல விளையாட்டிற்காக தனது படிப்பையும், படிப்பிற்காக விளையாட்டையும் விட்டுகொடுக்க மாளவிகாவிற்கு விருப்பமில்லை. அதுவே அவரின் கடின உழைப்புக்கு காரணமாக இருந்தது. அதற்கான விளைவுகளும் சிறப்பானதாக இருந்தன.
தனது பத்து மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் 90 சதவீத மதிப்பெண் பெற்ற மாளவிகா, அந்த தேர்வு சமயங்களில் நடைபெற்ற போட்டிகளில் 7 சர்வதேச பதக்கங்களையும் வென்றார்.
தனது துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கு பெற்றோரை கொண்ட மாளவிகாவிற்கு, தேவையான வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை பெறுவதற்கான சவால்களும் இருந்தன.
வெகுசில சின்தெடிக் ஆடுகளங்களே இருந்தன. அதிலும் சிலவற்றிலேயே போதுமான வெளிச்சம் (Illumination) இருந்தன. மேலும், குறைவான பயிற்சியாளர்களே இருந்தனர்.
ஜூனியர் (19 வயதுக்கு கீழ்) மற்றும் சப் ஜூனியர் (16வயதுக்கு கீழ்) அளவில் விளையாடிய பிறகு, மாளவிகாவின் பெற்றோர் போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதற்கு அதிக பணம் தேவைப்படும் என்றும், ஸ்பான்சர்ஷிப் கிடைப்பது கடினம் என்றும் உணர்ந்தனர்
இடது கை வீராங்கனையான மாளவிகா, மாலத்தீவில் வெற்றி பெற்ற ஒரே வாரத்தில் நேபாளத்தில் நடைபெற்ற அன்னப்பூர்னா போஸ்ட் இண்டேஷனல் போட்டியில் வெற்றி பெற்றார்.
சீனியர் அளவில் வெற்றிகளை பெறுவதற்கு முன் மாளவிகா ஜூனியர் அளவிலான போட்டிகளிலும் பல வெற்றிகளை பெற்றார்.
ஆசிய பள்ளிகளுக்கான பேட்மிண்டன் போட்டி மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் 21 வயதுக்குட்பட்டோருக்கான பேட்மிண்டன் போட்டி ஆகியவற்றில் தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
மாளவிகாவின் விளையாட்டு திறமை, இந்திய அரசு மற்றும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் கவனத்தை பெற்றது.
இதுவரை அவர் விளையாட்டுச் சார்ந்த பல விருதுகளையும் பெற்றுள்ளார். நாக பூஷன் விருதை பெற்றுள்ளார், கேலோ இந்தியாவின் தடகள வீரர்களின் திறமை வளர்ச்சி திட்டத்தின் அங்கீகாரம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்திலும் தேர்வாகியுள்ளார்.
படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் மாளவிகா, இரண்டையும் இணைக்கும் ஒரு சிறந்த வழியை அமைக்க வேண்டும் என்கிறார்.
தனது படிப்பில் கவனம் செலுத்தி அதே நேரம் நாட்டிற்காக பதக்கங்களை பெற்றுத்தர விரும்பும் பெண்களின் தேவைகளை புரிந்து கொள்ளும் விதமாக கல்வி அமைப்பு இருக்க வேண்டும் என்கிறார் மாளவிகா.
அவ்வாறு இருந்தால், பெண்கள் விளையாட்டு, படிப்பு என இரண்டிற்கு மத்தியில் ஏதோ ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்கிறார்.

மற்ற செய்திகள்
