'56 வயது மகளை சாட்சியாக வைத்து இளம்பெண்ணை திருமணம் செய்த முதியவர்'... 'LOVE வர இது தான் காரணமா'?... சுக்கு நூறாய் நொறுங்கிய நெட்டிசன்கள் இதயம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Feb 10, 2021 04:53 PM

29 வயது இளம்பெண் ஒருவர் 80 வயது முதியவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

29 Year old law student marries man 51 years older than her

காதலுக்குக் கண்ணில்லை, காதல் எந்த வயதிலும் வரலாம் என்ற கூற்றை எல்லாம் மெய்ப்பிக்கும் வகையில் நடந்துள்ளது இந்த சம்பவம். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் Terzel Rasmus. சட்டம் படித்து வரும் மாணவியான இவர், தன்னை விட 51 வயது மூத்தவரான 80 வயது மதிக்கத்தக்க 'வில்சன்' என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

29 Year old law student marries man 51 years older than her

நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ள அவர் தங்களுக்குள் எப்படி காதல் வந்தது என்பது குறித்து தற்போது விவரித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு வில்சனை நிகழ்ச்சி ஒன்றில் பார்த்ததாக Terzel கூறியுள்ளார். அவர் தான் என்னை முதலில் பார்த்தார். உடனே எனது அருகில் வந்து இங்கு எனது பக்கத்தில் அமரலாமா எனக் கேட்டார். அவரை அப்போது தான் நான் முதல் முதலாகப் பார்த்தேன்.

29 Year old law student marries man 51 years older than her

அந்த நிமிடமே எங்களுக்குள் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் வெகு நேரம் இருவரும் பேசிக் கொண்டு இருந்தோம். பிரிவதற்கு மனசே இல்லாமல் இருவரும் அங்கிருந்து சென்றோம். பின்னர் இருவரும் சந்தித்துக் கொள்ள முடிவு செய்து எங்களின் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டோம். ஒரு நாள் டேட்டிங் செல்ல முடிவு செய்து இருவரும் வெளியில் சென்றோம். அப்போது இருவருக்குள்ளும் நல்ல ஒரு புரிதல் இருப்பது எங்களுக்குப் புரிந்தது.

29 Year old law student marries man 51 years older than her

இதையடுத்து ஒரு வருடம் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என Terzel தெரிவித்துள்ளார். இருவரின் திருமணத்திற்கு Terzelயின் பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், வில்சனும் தனது 51 வயது மகளைச் சாட்சியாக வைத்து Terzelயை திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெளியில் சென்றால் தந்தை, மகள் எனப் பலர் கூறுகின்றனர். ஆனால் அது குறித்து எங்களுக்குக் கவலை இல்லை. வில்சனை பார்த்ததும், அவர் என்னை வாழ்நாள் முழுவதும் நன்றாகக் கவனித்துக் கொள்வார் எனத் தோன்றியது. அந்த ஒரு கணத்தில் இவர் தான் என்னுடைய வருங்கால கணவர் என்பதை முடிவு செய்து விட்டேன் என Terzel கூறியுள்ளார்.

29 Year old law student marries man 51 years older than her

இதனிடையே இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில், முதியவர் மீது காதல் வர Terzel தெரிவித்துள்ள கருத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களின் இதயம் நொறுங்கி விட்டதாகப் பதிவிட்டுள்ளார்கள். அதிலும் குறிப்பாக சில பேர் 90ஸ் கிட்ஸ் எல்லாம் ரொம்ப பாவம் என வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 29 Year old law student marries man 51 years older than her | World News.