கல்யாண நாளுக்காக மனைவிக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த கணவன்.. விழுந்து விழுந்து சிரித்த மனைவி.. அப்படி என்ன பண்ணார் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்திருமணமான இரண்டாம் ஆண்டை கொண்டாட மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணி கணவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொருவரும் தங்களது திருமண நாளன்று கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் சர்ப்ரைஸாக பரிசுகளை கொடுப்பது உண்டு. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒருவர், தனது இரண்டாவது திருமண ஆண்டை கொண்டாட விரும்பியுள்ளார். அதற்காக தனது மனைவிக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கவும் நினைத்துள்ளார். அதன்படி தங்களுக்கு திருமணம் நடந்த தேதியை கையில் பச்சை குத்திக் கொண்டு சென்றுள்ளார்.
இதனை தனது மனைவியிடம் சர்ப்ரைஸ் எனக் காட்டியுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி விழுந்து விழுந்து சிரித்துள்ளார். அதற்கு காரணம், அவர்கள் திருமணம் செய்து கொண்டது 01.01.2019-ஆம் தேதி. ஆனால் இதற்கு பதிலாக 11.919 என அவர் பச்சை குத்தி கொண்டு வந்துள்ளார். இதனை அவரது மனைவி சமூக வலைதளங்களில் பதிவிடவே வைரலாகியுள்ளது.

மற்ற செய்திகள்
