'கணவர் கிட்ட கோடி கோடியா சொத்து இருக்கு...' 'கோடீஸ்வரரோட' மனைவியா இப்படி 'ஒரு காரியத்தை' செஞ்சாங்க...? - உடைந்து நொறுங்கிய கணவன்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் காணமல் போன மனைவியின் பின்னணி குறித்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிக செல்வங்களை கைவசம் வைத்துள்ள கோடீஸ்வரர் ஒருவரின் மனைவியான 45 வயது பெண்மணி தன்னை விட வயதில் இளைய ஆட்டோ ஓட்டுனருடன், வீட்டில் இருந்த 47 லட்ச ரூபாய் பணத்துடன் ஜுட் விட்டிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மனைவி வீட்டில் இருந்த 47 லட்ச ரூபாய் பணத்துடன் மாயமாகி விட்டதாக கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து அந்த பணக்காரரின் மனைவியை தேடும் பணியில் தீவிரமாக இறங்கிய காவல்துறையினர், அவருடைய அன்றாட செயல்கள், பழக்க வழக்கங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண் பயணம் செய்வதற்காக அடிக்கடி ஒரு ஆட்டோ ஒன்றில் ஏறி சென்றது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த போது அந்த ஆட்டோ ஓட்டுனரும் அதே தேதியில் இருந்து மாயமானது தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரையும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த ஆட்டோ ஓட்டுனரின் பெயர் இம்ரான் எனவும் அவருக்கு 32 வயது ஆகிறது எனவும், இருவருக்குள்ளும் ரகசியமாக கள்ளக்காதல் இருந்தது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனரான இம்ரானின் நண்பர் ஒருவரிடம் இருந்து கோடீஸ்வரருக்கு சொந்தமான 33 லட்ச ரூபாயை போலீசார் மீட்டுள்ளனர்.
மேலும் அந்த கோடீஸ்வரரின் மனைவியும், ஆட்டோ ஓட்டுனரும் காந்த்வா, ஜாவ்ரா, உஜ்ஜைன், ரத்லம் என அடிக்கடி தங்களின் இருப்பிடத்தை மாற்றிச் சென்றுள்ளனர். போலீசார் தொடர்ந்து இருவரையும் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இருவரையும் பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருவதாக கூறப்படுகிறது.
அந்த கோடீஸ்வரருக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. தனது கணவரின் 47 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தன்னை விட 13 வயது குறைவான இளைஞருடன் கோடீஸ்வரரின் மனைவி, ஆட்டோ ஓட்டும் வாலிபருடன் மாயமானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
