அய்யோ...! ரோகித்துக்கும், வார்னருக்கும் பந்துவீச தான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 22, 2021 03:26 PM

தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் பந்துவீச கஷ்டப்பட்ட பேட்ஸ்மேன்கள் குறித்து பாகிஸ்தான் பவுலர் சதாம் கான் பகிர்ந்துள்ளார்.

Rohit and Warner most difficult to bowl to, Shadab Khan

பாகிஸ்தான் அணியின் இளம் ஆல்ரவுண்டரான சதாம் கான், கடந்த 2017ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவர் பாகிஸ்தான் அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது பாகிஸ்தானின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார்.

Rohit and Warner most difficult to bowl to, Shadab Khan

இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள் 48 ஒருநாள் மற்றும் 64 டி20 போட்டிகளில் சதாம் கான் விளையாடி உள்ளார் மேலும் பாகிஸ்தான் அணிக்கு துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Rohit and Warner most difficult to bowl to, Shadab Khan

இந்த நிலையில் டுவிட்டரில் ரசிகர்கள் சதாம் கானிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், ‘நீங்கள் பந்துவீச சிரமப்பட்ட பேட்ஸ்மேன்கள் யார்?’ என கேள்வி எழுப்பினர்.

இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த சதாம் தான், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் என பதிலளித்தார். இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Tags : #ROHIT SHARMA #DAVIDWARNER #SHADABKHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rohit and Warner most difficult to bowl to, Shadab Khan | Sports News.