உன்ன 'நம்பி' தானடா கூட வந்தேன்...! 'ஒரு மொபைல், ஒருவேளை சாப்பாட்டுக்காக...' 'கட்டுன மனைவி என்றும் பாராமல்...' - கணவன் செய்த 'நம்பிக்கை' துரோகம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த ஜூலை மாதிரி ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் 26 வயதான பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.

திருமணமான கையோடு இருவரும் செங்கல் சூலையில் வேலை செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றுள்ளனர். ஒரு மாத காலம் நன்றாக வாழ்ந்த நிலையில் அந்த இளைஞர் தன் மனைவியை சுமார் 1.8 லட்சம் ரூபாய்க்கு 55 வயதுள்ள ஒருவருக்கு விலை பேசி விற்றுள்ளார்.
தன் சொந்த மனைவியை பணத்திற்காக விற்ற கையோடு சொந்த ஊரான ஒடிசாவிற்கு சென்றுள்ளார். திருமணம் ஆன தன் மகளை பார்க்க பெண் வீட்டார் வந்த போது அங்கு அந்த பெண் இல்லாததால் பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்களின் மகள் எங்கே என அந்த இளைஞரிடம் கேட்கும் போது அந்த இளைஞரோ அசால்ட்டாக தனது மனைவி தன்னை விட்டு ஓடிச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனை நம்பாத பெண்ணின் பெற்றோர் ஒடிசா காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஒடிசா காவல்துறை ராஜஸ்தான் காவல்துறையின் உதவியுடன் அந்தப் பெண்ணைத் தேடியதில் பணத்துக்காகத் தனது மனைவியை இந்த நபர் விற்றது தெரிய வந்துள்ளது.
அதோடு, அந்த இளைஞர் ஸ்மார்ட் போன் வாங்கவும், உல்லாச ஓட்டலில் தாங்குவதற்காகவும் இந்த காரியத்தை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. தன்னிடம் இருந்த பணத்திற்கு செல்போன் வாங்கியத்தோடு, ஸ்டார் ஹோட்டலில் தங்கி கையில் இருந்த பணத்தைச் செலவழித்து ஹோட்டலின் உணவுகளை ஒரு கை பார்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
