'ஜிம் போகல...' 'டயட் இருக்கல...' 21 கிலோ மெலிஞ்சுட்டேன்...! எல்லாத்துக்கும் காரணம் 'அவ' தான்...! - 'கண்ணீர்' வடிக்கும் கணவன்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹரியானா மாநிலம் ஹிஷார் பகுதியை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவருக்கும், தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு ஒரு மகளும் உள்ளார்.
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டைகளும் ஏற்படும். இந்நிலையில் விரக்தியடைந்த கணவர் தன் மனைவியிடம் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில் குறிப்பிட்டிருந்த விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதில், 'என் மனைவி வசதியான வீட்டில் பிறந்தவள். அவளுடைய வீட்டார் முன் என்னை எப்போதும் அவமானப்படுத்தி வந்தார்.
சில நாட்களில் இதெல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் என் மனைவி மாறவேயில்லை. அவள் என்னை தினமும் செய்த சித்ரவதையால் திருமணமான போது 74 கிலோவாக இருந்த நான் இப்போது 53 கிலோவாக குறைந்துவிட்டேன்.
என்னால் இனியும் அவளின் கொடுமைகளை தாங்க முடியாது. இதனால் எனக்கு விவாகரத்து அளிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் பெண்ணின் தரப்பில், தனது கணவனை தான் எப்போதும் அன்புடனும், மரியாதையுடனும் நடத்தியதாகவும், கணவரின் வீட்டார் தான் திருமணமான 6 மாதங்களிலேயே வரதட்சணைக்காக தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், அவமானப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த இவ்வழக்கு, மனைவி மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி ஆகஸ்டு 27-ந் தேதி மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து கொடுத்து குடும்ப நல கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், குடும்பநல கோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து பெண் ஆசிரியர் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார்.
பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் நீதிபதிகளும் மனைவியின் சித்ரவதையால் 21 கிலோ எடை குறைந்தவரின் விவாகரத்தை உறுதி செய்து, அந்த பெண் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கணவரின் குடும்பத்தார் மீது சுமத்தப்பட்ட அனைத்து கிரிமினல் புகார்கள் மற்றும் வழக்குகள் பொய்யானது என்றும் ஐகோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.