"நான் இருக்கறப்போ அவங்க இப்டி பண்ணது எனக்கு புடிக்கல... அதனால..." - தாயை கொடூரமாக 'கொன்று'... மொபைலில் படம் எடுத்த 'மகன்'... அதிர வைக்கும் 'காரணம்'!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Jul 30, 2020 07:05 PM

மத்தியப்பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தை அடுத்த கட்டிகா என்னும் கிராமத்தை சேர்ந்த திரேந்திரா பாண்டே என்பவர் தனது மனைவி சாவித்ரியை யாரோ கொலை செய்து விட்டு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் புதைத்ததாக புகாரளித்துள்ளார்.

mp man slits throat as she loved elder son more

இதனைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். முன்னதாக, சாவித்ரியின் மூத்த மகன் கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். மூத்த மகனின் மறைவில் இருந்து மீள முடியாமல் சாவித்ரி மிகவும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. அடிக்கடி தனியாக உட்கார்ந்து அழுது கொண்டே இருப்பாராம். இதன் காரணமாக, அவருக்கு சிறிதளவில் மனநலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சாவித்ரியின் இளைய மகன், தனது தாயை அதிகம் வெறுத்துள்ளார். அண்ணன் இறந்து ஒரு வருடங்கள் ஆகியும், தன்னை விட தனது தாய்க்கு இறந்து போன அண்ணன் மீதே அதீத பாசம் என அவர் நினைத்துள்ளார். இவர் வேலைக்கும் சரிவர போகாமல் இருந்து வந்த நிலையில், தனது தாய், மனைவி மற்றும் தந்தை மீது தேவையில்லாத காரணங்களுக்காக எல்லாம் சண்டை போட்டு வந்துள்ளார். தனது தாயை அடிக்கடி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால், சாவித்ரியின் இளைய மகனிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது தனது தாயை தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அது மட்டுமில்லாமல், தாயைக் கொலை செய்து அதனை தன் மொபைலில் படம் பிடித்து வைத்துள்ள அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார்.

தொடர்ந்து, போலீசார் அவரின் மொபைல் போனில் இருந்த வீடியோவை கைப்பற்றினர். அந்த வீடியோவில், 'தாய் சாவித்ரியை கூர்மையான ஆயுதம் ஒன்றைக் கொண்டு கழுத்தை அறுத்துள்ளார். தன்னை விடுவிக்க வேண்டி அவர் மகனிடம் கெஞ்சிய நிலையில், அதனை பொருட்படுத்தாமல் அவரது தாயை கொடூரமாக கொலை செய்தார். இதில், சாவித்ரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தாயைக் கொன்ற குற்றவாளியை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

அண்ணன் மீது பாசம் அதிகமாக இருந்த காரணத்தினால் தாயை கழுத்தை அறுத்து மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mp man slits throat as she loved elder son more | India News.