‘ஒரு மாசம் இத பண்ணனும்’.. தற்கொலை நாடகமாடிய பெண்.. நீதிபதி ‘விசித்திர தண்டனை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 10, 2019 04:20 PM

விஷம் குடித்து தற்கொலை செய்வதாகக் கூறி நாடகமாடிய பெண் ஒருவருக்கு காரைக்குடி நீதிமன்றம் வித்தியாசமான தண்டனை அளித்துள்ளது மக்களிடையே கவனயீர்ப்பை பெற்றுள்ளது.

 

verdict for the woman who acted like committing suicide

காரைக்குடியில், கார்த்திகா என்கிற பெண், கடந்த மாதம் தனக்கு பணியாற்றும் இடத்தில் பாலியல் தொந்தரவு வந்ததன் காரணமாக, தன் கணவருடன் தகராறு ஏற்பட்டதாகக் கூறி தற்கொலை செய்வதாக கூறி விஷம் அருந்துவது போல் வீடியோ வெளியிட்டார்.

இதன் பிறகு அவரை அப்பகுதியை சேர்ந்த காவல்துறை எஸ்.ஐ.தினேஷ் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால், கார்த்திகா சோப்-ஆயில் அருந்திவிட்டு நாடகம் ஆடியுள்ளார் என்று பின்னர் தான் தெரிய வந்தது. இதனை அடுத்து காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி பாலமுருகனின் கவனத்திற்கு இந்த வீடியோ கொண்டு செல்லப்பட்டது.

இதனை, காவல்துறை உதவி ஆய்வாளர் தினேஷ் மற்றும் கார்த்திகா இருவரிடமும் விசாரித்த நீதிபதி, அதன்பின்னர் எடுத்திருக்கும் முடிவும், கொடுத்திருக்கும் தண்டனையும்தான், தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைக்கு தினமும், தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அழைத்துவரப்படும், ஒவ்வொருவரிடமும் சென்று உயிரின் மதிப்பு என்ன என்று விளக்க வேண்டும் என்று கார்த்திகாவிற்கு தண்டனை அளித்துள்ளார்.

Tags : #SUICIDEATTEMPT #VERDICT