‘கடைசி வரை போராடி தோல்வி’.. டுவிட்டரில் உருக்கமான பதிவிட்ட நியூஸிலாந்து வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 15, 2019 11:28 AM

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் போராடி தோல்வி அடைந்த பிறகு நியூஸிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.

Jimmy Neesham tweets advising kids not to take up sport

இங்கிலாந்து லாட்ர்ஸ் மைதானத்தில் நேற்று இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி இங்கிலாந்து அணி வரலாறு படைத்தது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டை இழந்து 241 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்தது. இதனால் போட்டி டிரா ஆனது. இதனை அடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 15 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணியும் 15 ரன்களை எடுத்ததால் போட்டி மீண்டும் டிரா ஆனது. இதனை அடுத்து அதிக பவுண்டரிகள் எடுத்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் போட்டி டிராவில் முடிந்தும் தோல்வியை சந்தித்ததால் நியூஸிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் நீஷம் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #NZVENG #JIMMY NEESHAM #CWC19FINAL