‘இரக்கமின்றி பள்ளிக்குழந்தைகள் மீது கொலைவெறி தாக்குதல்’!..‘13 குழந்தைகள் உட்பட’.. பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Arunachalam | May 28, 2019 11:23 AM

மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 2 பேர் பலி மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Two killed and many children got injured in Tokyo in murderous attack

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவின் தெற்கு பகுதியில் உள்ள கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் என பலரும் பரபரப்பாக நடமாடி கொண்டிருந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில், அங்கிருந்தவர்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இச்சம்பவத்தில் பள்ளிக்குழந்தைகள் உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடித்தபோது அவர் தன்னை தானே கத்தியால் கழுத்தில் குத்தி தற்கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, இச்சம்பவத்தில், அந்த மர்மநபர் உட்பட் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பள்ளிக்குழந்தைகள் உட்பட 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த இரண்டு கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #TOKYO #MURDEROUS ATTACK #CHILDREN #INJURED