"பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பரிசு இதுதான்..என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியல" MM கீரவாணியை நெகிழ வச்ச தருணம்.. வீடியோ.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆஸ்கர் விருதை வென்ற MM கீரவாணியின் சமீபத்திய போஸ்ட் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | பல நாள் பிரச்சனை... ஒரே போன்காலில் தீர்த்து வச்ச சபாநாயகர் அப்பாவு.. ஆன் தி ஸ்பாட்டில் அதிரடி..!
RRR
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட திரைப்படம் "RRR". ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.
நாட்டு நாட்டு
பிரபல இசையமைப்பாளர் மரகதமணி எனும் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது. இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். அது முதல் ஆஸ்கரை வெல்லுமா நாட்டு நாட்டு பாடல்? என ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழுந்தது. கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
ஆஸ்கர் மேடையில் தான் சிறுவயதில் கார்பெண்டர்ஸ் (அமெரிக்க இசைக்குழு) இசையை கேட்டு வளர்ந்ததாக உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்த கீரவாணி கார்பெண்டர்ஸ்-ன் 'டாப் ஆஃப் தி வேர்ல்ட்' பாடல் மூலம் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இசைக்கலைஞரும் கீரவாணியின் ஆதர்சமான ரிச்சர்ட் கார்பெண்டர் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான உங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு எங்களுடைய குடும்பத்தின் சிறிய பரிசு" என குறிப்பிட்டு கீரவாணி மற்றும் சந்திரபோஸ் ஆகியோரை டேக் செய்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
பரிசு
மேலும் அதில் டாப் ஆஃப் தி வேர்ல்ட் பாடல் மூலம் கீரவாணிக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார் ரிச்சர்ட். இந்த வீடியோவில் கமெண்ட் செய்திருக்கும் கீரவாணி,"இது முற்றிலும் நான் எதிர்பார்க்காத ஒன்று. ஆனந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பரிசு" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பதிவில் கமெண்ட் செய்திருக்கும் இயக்குநர் ராஜமௌலி," ஆஸ்கர் பயணம் முழுவதும் அவர் (கீரவாணி) தனது உணர்ச்சியை எப்போதும் வெளிப்படுத்தியதில்லை. ஆனால், இதனை கேட்ட பிறகு அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கள் குடும்பத்திற்கு மறக்க முடியாத தருணம்..
மிக்க நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.