VIDEO: பிறந்தநாளுக்கு காஸ்ட்லியான ‘கிஃப்ட்’ கொடுத்த மனைவி.. எமோஷனல் ஆன கணவன்.. ‘செம’ க்யூட் மொமண்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகணவனின் பிறந்த நாளுக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவன்-மனைவி தங்களது திருமண நாளன்றோ அல்லது பிறந்த நாளன்றோ சர்ப்ரைஸ் கிஃப்ட்டுகளை வழங்கி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் பெண் ஒருவர் தனது கணவனின் பிறந்த நாளன்று சர்ப்ரைஸ் கிஃப்ட் வழங்கிய வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.
அதில், மனைவி தனது கணவனின் கண்களை துணியால் கட்டிக் கொண்டு ராயல் என்ஃபீல்டு ஷோரூமுக்கு அழைத்து வருகிறார். அங்கு தனது கணவனுக்காக ஆசையாக வாங்கி வைத்திருந்த புது ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு முன்னாள் நிறுத்தி கண்கட்டை அவிழ்த்து விட்டுள்ளார்.
கண்ணை திறந்து பார்த்ததும், தனது மனைவி தனக்காக வாங்கி வைத்திருந்த புது பைக்கைப் பார்த்ததும், கணவன் உணர்ச்சிவசப்பட்டு லேசனாக கண்கலங்கினார். உடனே அவரை ஆசுவாசப்படுத்தி பைக்கில் அமர வைத்து மனைவி அழகு பார்த்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது வாழ்த்தையும் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
