இந்தியாவுக்கே பெருமை! OSCAR வென்ற RRR பாடல்.. விருது அறிவிக்கும் போது தீபிகா படுகோனேயின் வைரல் ரியாக்ஷன்.. VIDEO
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்கார் விருது விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது அறிவிக்கும் போது நடிகை தீபிகா படுகோனேயின் ரியாக்ஷன் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.
ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு.
RRR படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாக ஈட்டியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
Images are subject to © copyright to their respective owners.
கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் ஜாப்பனிஷ் மொழியில் வெளியாகி உள்ளது. ஐமாக்ஸ் 3டியிலும் இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த படம் சிறந்த பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது.
Images are subject to © copyright to their respective owners.
ஆஸ்கார் விருது விழா அமெரிக்க நேரப்படி இன்று மார்ச் மாதம் 13 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், நடிகர் ராம் சரண், அவரது மனைவி உபசன்னாவும் கலந்து கொண்டனர்.
இதில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி & பாடலாசிரியர் சந்திரபோஸ் விருதை பெற்றுக் கொண்டனர். நாட்டு நாட்டு பாடலை நடிகை தீபிகா படுகோனே அறிமுகம் செய்து வைத்தார். மேலும் விருது அறிவிக்கும் போது மகிழ்ச்சி அடைந்து தீபிகா படுகோனே கொடுத்த நெகிழ்ச்சியான ரியாக்ஷன் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
Deepika Padukone at the #Oscars when Naatu Naatu won for Best Original Song #DeepikaAtOscars pic.twitter.com/wwyOHEOtiM
— Team DP Malaysia (@TeamDeepikaMY_) March 13, 2023
Also Read | தமிழ்நாட்டின் முதுமலையில் தயாராகி ஆஸ்கார் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப்படம்! விபரம்.