VIDEO: 'தம்பி... இங்க வாங்க!.. 'இது' உங்களுக்குத்தான்!'.. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்... இலங்கை வீரரை அழைத்து... பாண்டியா செய்த 'மாஸ்' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை ஆல்ரவுண்டர் சமிகா கருணாரத்னேவுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா செய்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று கொழும்புவின் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 38 ரன் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இலங்கை ஆல்ரவுண்டரான சமிகா கருணாரத்னேவுக்கு தன்னுடைய பேட்டை பரிசாக வழங்கி இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கருணாரத்னே வெளியிட்டுள்ள பதிவில், "என்னுடைய ரோல் மாடல் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பேட்டை பெற்றது கெளரவமாக கருதுகிறேன். அதுவும் என்னுடைய முதல் சர்வதேச டி20 போட்டியில் இது சாத்தியமாகி இருக்கிறது. நீங்கள் ஒரு அருமையான மனிதர். உங்களின் இந்தப் பரிசால் நான் நெகிழ்ச்சி அடைந்தேன். இந்நாளை எப்போதும் மறக்கமாட்டேன். கடவுள் உங்களை எப்போதும் ஆசிர்வதிப்பார்" என்று சமிகா கருணாரத்னே குறிப்பிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா செய்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
