VIDEO: மணமகனின் ‘ஃபிரண்ட்ஸ்’ கொடுத்த சர்ஃப்ரைஸ் கிஃப்ட்.. ஆர்வமாக பிரித்த அடுத்த நொடியே ‘கோபமாக’ தூக்கி வீசிய மணப்பெண்.. அப்படி என்னய்யா கிஃப்ட் அது..?
முகப்பு > செய்திகள் > இந்தியாமணமகனின் நண்பர்கள் கொடுத்த கிஃப்ட்-ஐ பிரித்துப் பார்த்ததும் மணப்பெண் கோபமாகி அதை தூக்கி வீசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக திருமண விழாவின்போது மணமகன் மற்றும் மணமகளின் நண்பர்கள் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஏதாவது ஒன்று செய்து வருகின்றனர். அதில் பலரும் வித்தியாசமாக கொடுக்கும் கிஃப்ட் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
அந்த வகையில் வட இந்தியாவில் நடந்த திருமணம் ஒன்றில், மணமகனின் நண்பர்கள் மணமகளுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்துள்ளனர். அதை ஆர்வமாக பிரித்து பார்த்த மணமகளின் முகம் ஒரு நொடியில் கோபமாக மாறியது. இதனை அடுத்து அந்த கிஃப்டை அவர் தூக்கி கீழே வீசினார்.
அப்படி மணப்பெண் கோபமடைய காரணம் என்னவென்றால், நண்பர்கள் கொடுத்த கிஃப்ட் பாக்ஸில், குழந்தைக்கு பால் ஊட்டும் பாட்டில் இருந்ததுதான். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி, இதுவரை 11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
இதேபோல் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த திருமணம் ஒன்றில், நண்பர்கள் விளையாட்டாக செய்த கலாட்டாவால், மணப்பெண் திருமணத்தை நிறுத்தியது குறுப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
