தோனியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்!.. மனைவி சாக்ஷிக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!.. வைரலாகும் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் வீரர் தோனி, தனது திருமண நாள் அன்று மனைவிக்கு அளித்துள்ள பரிசு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான கேப்டனாக வலம் வந்தவர் தோனி. இன்றும் கேப்டன் என்றால் பலரும் தோனியை தான் முதலில் நினைப்பார்கள். இவர் நல்ல கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி நல்ல குடும்பத்தலைவராகவும் இருப்பதால் இவருக்கு பெரும்பாலான பெண் ரசிகைகள் உள்ளனர்.
ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான தோனி - சாக்ஷி தம்பதி நேற்று தங்களது 11வது திருமண நாளை கொண்டாடினர். தன்னுடைய ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கையில் பிசியாக வலம் வந்த தோனி, தனது காதலி சாக்ஷி குறித்து வெளி உலகிற்கு தெரியப்படுத்தாமலேயே இருந்தார். பின்னர் கடந்த ஜூலை 4ம் தேதி 2004ம் ஆண்டு திடீரென சாக்ஷியை டேஹ்ராடூனில் திருமணம் செய்துகொண்டார். இது அவர்களின் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்நிலையில், அவர்கள் நேற்று தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.
இவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், திருமண நாள் அன்று மனைவி சாக்ஷிக்கு மிகவும் அழகான விண்டேஜ் கார் ஒன்றை பரிசளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் தோனி. இதுகுறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சாக்ஷி, திருமண நாள் பரிசுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா தாஜ் பெங்கால் ஹோட்டலில் தான் தோனி - சாக்ஷியின் முதல் சந்திப்பு நடைபெற்றது. பாகிஸ்தான் போட்டிக்காக இந்திய அணி அந்த ஹோட்டலில் தங்கி இருந்தனர். தோனியின் நெருங்கிய நண்பரும், அவரின் மேளாலருமான யுதாஜித் தத்தா என்பவர் சாக்ஷியின் தோழரும் ஆவர்.
எனவே, தோனியை பார்க்க தத்தா செல்லும் போது அந்த ஹோட்டலில் பயிற்சி பெற்று வந்த சாக்ஷியும் அவருடன் சென்றார். பின்னர் தத்தாவிடம் சாக்ஷியின் மொபைல் நம்பரை வாங்கி அவருக்கு மெசேஜ் செய்துள்ளார் தோனி. அதன்பின் இருவரும் நண்பர்களாக பழகி, பிறகு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

மற்ற செய்திகள்
