பல நாள் பிரச்சனை... ஒரே போன்காலில் தீர்த்து வச்ச சபாநாயகர் அப்பாவு.. ஆன் தி ஸ்பாட்டில் அதிரடி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 16, 2023 12:37 PM

நெல்லை மாவட்டத்தில் பல நாட்களாக போதிய பேருந்து வசதி இல்லாமல் தவித்து வந்த பள்ளி செல்லும் குழந்தைகளின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்திருக்கிறார் சபாநாயகர் அப்பாவு.

Speaker Appavu Resolve School Students Issue with Bus Facility

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | அப்புறம் என்னப்பா கப் நமக்கு தான்னு அறிவிச்சிடலாமா?.. பிராவோ-வின் மாஸ் என்ட்ரி.. வீடியோ..!

சபாநாயகர் அப்பாவு

தமிழக சபாநாயகர் அரசு நலத்திட்டங்களை துவங்கி வைக்க நெல்லை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து வருகிறார். இதன்படி நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை அவர் நேற்று துவங்கி வைத்தார். அதேபோல, ராதாபுரம் அருகே விஜயா புரம் ஊராட்சி இடிந்தகரை அருவிக்கரையில் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை அவர் துவங்கி வைத்திருக்கிறார்.

காத்திருந்த மாணவர்கள்

வையகவுண்டன் பட்டி. இந்தக் கிராமத்தின் வழியே இடிந்தகரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சபாநாயகர் அப்பாவு நேற்று மாலை சென்று கொண்டிருந்தபோது மாணவர்கள் சபாநாயகரின் காரை நிறுத்துமாறு சைகை செய்திருக்கின்றனர். சாலையோரம் காத்திருந்த மாணவர்களை கண்டதும் உடனடியாக காரை நிறுத்த சொன்ன சபாநாயகர் மாணவர்களிடம் எதற்காக காத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? என கேட்டிருக்கிறார். அதற்கு பேருந்து வசதி உரிய நேரத்தில் இல்லாததால் காத்திருக்க வேண்டியிருப்பதாக மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

உடனடி தீர்வு

மேலும், பள்ளியிலிருந்து தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்துவதால் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர் மாணவர்கள். பல நாட்களாக இந்த பிரச்சனை இருந்து வருவதாகவும் மாணவர்கள் கூற, உடனடியாக நெல்லை மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு போன் செய்தார் சபாநாயகர் அப்பாவு. அப்போது, இந்த பிரச்சனை குறித்து பேசிய அவர் உடனடியாக பேருந்து வசதியை உரிய நேரத்தில் ஏற்படுத்திக்கொடுக்கும்படி வலியுறுத்தியிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners. 

போனில் அவர் பேசிக்கொண்டிருந்த போதே, வள்ளியூர் - கூத்தங்குழி இடையேயான அரசுப் பேருந்தை அதிகரிகள் அனுப்பி வைத்தனர். அதனுடன், மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளி செல்ல எதுவாக பள்ளியின் வாசலிலேயே பேருந்தை நிறுத்தும்படியும் அப்பாவு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். பேருந்தை கண்டதும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் ஓடிச்சென்று ஏற, பின்னர் அங்கிருந்து அப்பாவு புறப்பட்டு சென்றார்.

Also Read | "டிவி ரிமோட்-னு ஒன்ன கண்டுபிடிக்காமலேயே இருந்திருக்கலாம்".. நெட்டிசன்களை யோசிக்க வச்ச ஆனந்த் மஹிந்திராவின் போஸ்ட்..!

Tags : #APPAVU #SPEAKER APPAVU #SCHOOL STUDENTS #BUS FACILITY #சபாநாயகர் அப்பாவு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Speaker Appavu Resolve School Students Issue with Bus Facility | Tamil Nadu News.