"உழைச்சவங்களுக்கு நல்லது செய்யணும்".. 100 ஊழியர்களுக்கு பிரபல நிறுவனர் அளித்த நெகிழ்ச்சி பரிசு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று தனது 100 ஊழியர்களுக்கு புது காரை பரிசாக அளித்திருக்கிறது.

"கொரோனா விஷயத்துல இதை சாதிக்க உதவுன எல்லோருக்கும் நன்றி"…. பிரபல மருத்துவனை Dean நெகிழ்ச்சி தகவல்!
பரிசு
சமீப காலமாக தங்களது ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக கார் உள்ளிட்ட விலையுயர்ந்த பரிசுகளை வழங்கிவருகின்றன நிறுவனங்கள். பொதுவாக ஏற்றுமதி நிறுவங்கள் இதுபோன்ற இன்ப அதிர்ச்சிகளை தங்களது ஊழியர்களுக்கு அளித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தற்போது தமிழக நிறுவனங்கள் பலவும் இதுபோன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன.
100 கார்கள்
அந்த வகையில் சென்னையை தலைமை இடமாகக்கொண்டு இயங்கிவரும் Ideas2IT நிறுவனம் தனது 100 ஊழியர்களுக்கு மாருதி கார்களை பரிசாக கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த பணியாளர்களின் முயற்சியை பாராட்டும் நோக்கில் இந்த பரிசை அந்த நிறுவனம் வழங்கி இருக்கிறது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள தங்களது புதிய அலுவலகத்தை Ideas2IT நிறுவனர் முரளி விவேகானந்தன் நேற்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காயத்ரி விவேகானந்தன் கலந்துகொண்டனர். அப்போது தங்களது நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரிந்த 100 ஊழியர்களுக்கு 100 காரினை வழங்கினார் முரளி.
ஊக்கம்
இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் முரளி விவேகானந்தன் பேசுகையில்," நிறுவனத்தில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் கார் வழங்கப்பட்டு உள்ளது. இது அவர்கள் செய்யப்போகும் பணிகளுக்காக தரப்பட்டது அல்ல. கடந்த வருடங்களில் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டதை பாராட்டும் விதமாக இந்த பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஊழியர்களுடன் ஏற்கனவே பேசி முடிவெடுக்கப்பட்டது. கடினமாக உழைப்பவர்களுக்கு வளர்ச்சியின் ஒரு பகுதியை அளிக்கும் முயற்சியின் முதல் படி இது" என்றார்.
இந்த நிகழ்வில் பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காயத்ரி விவேகானந்தன் "100 ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்காக 100 கார்களை வழங்கி கவுரவித்த முதல் இந்திய ஐடி நிறுவனம் என்பதில் பெருமை கொள்கிறோம். Ideas2IT நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அவர்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர்" என்றார்.
100 பணியாளர்களுக்கு 100 கார்களை சென்னையை சேர்ந்த நிறுவனம் வழங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தொடர் கொள்ளை.. ஆனா எல்லாத்துலயும் ஒரே பார்முலா.. போலீஸ் போட்ட வலையில் சிக்கிய பலே திருடன்..!

மற்ற செய்திகள்
