"அட, இப்படியும் ஒரு MATERNITY ஷூட்டா?".. மொத்த குடும்பத்தையும் ஒரே ஃப்ரேமில் கொண்டு வந்த வாலிபர்.. மனதை நெகிழ வைக்கும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Mar 16, 2023 03:15 PM

இன்றைய காலக்கட்டத்தில் திருமணத்தை சுற்றி ஏராளமான விஷயங்கள் நடைபெறுவதை நாம் கவனித்திருப்போம்.

Maternity shoot from kerala three generations family video gone viral

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரபல தமிழ் பாட்டுக்கு.. சுனில் கவாஸ்கருடன் சேர்ந்து டான்ஸ் போட்ட தினேஷ் கார்த்திக்.. "இப்டி வித்தியாசமா இருக்கே!!"

அதிலும் குறிப்பாக திருமண நேரத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் செய்வது தொடர்பான விஷயம் பெரிய அளவில் பலரது கவனத்தை பெறும் வகையிலும் இருக்கும். இதற்கு காரணம் இயல்பான வழியில் போட்டோ ஷூட் புகைப்படங்களை அவர்கள் எடுக்காமல் மிகவும் வித்தியாசமாக புதிது புதிதாக ஆலோசித்து அதற்கான முயற்சிகளில் களமிறங்குவார்கள்.

அதே போல திருமணத்துடன் மட்டும் முடித்துக் கொள்ளாமல் அதற்கடுத்து நடைபெறும் ஏதாவது வீட்டு விசேஷ நிகழ்ச்சியின் போதும், பெண்ணின் Maternity காலத்திலும் என அவர்கள் புது விதமான வகையில் போட்டோஷூட் அல்லது வீடியோக்களை எடுக்கவும் செய்வார்கள்.

Maternity shoot from kerala three generations family video gone viral

Images are subject to © copyright to their respective owners.

அந்த வகையில், கேரளத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் தனது மனைவி கர்ப்பமுற்று இருக்கும் சமயத்தில் எடுத்த Maternity ஷூட் வீடியோ, பலரையும் மனம் நெகிழ வைத்து வருகிறது.

Maternity shoot from kerala three generations family video gone viral

Images are subject to © copyright to their respective owners.

கேரள மாநிலம், இடுக்கியை சேர்ந்தவர் ஜிபின் ஜாய். புகைப்பட கலைஞரான இவரது மனைவி சிஞ்சு, தற்போது கர்ப்பமாக உள்ளார். இதற்கிடையில் தனது மனைவியின் Maternity ஷூட்டை வித்தியாசமாக எடுக்க வேண்டும் என விரும்பிய ஜிபின் ஜாய், தனது குடும்பத்தினர் அனைவரையும் கூட இந்த வீடியோவில் இணைத்துள்ளார்.

Maternity shoot from kerala three generations family video gone viral

Images are subject to © copyright to their respective owners.

அதாவது, தாத்தா - பாட்டி தொடங்கி, மொத்தமாக மூன்று தலைமுறையை சேர்ந்த தம்பதிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். அனைவரும் ஜோடியாக இடம்பெற்றுள்ள சூழலில், அவர்களின் மனைவிகள்  கர்ப்பமாக இருப்பது போன்றும் உள்ளது. 87 வயது தாத்தாவும், 80 வயது பாட்டியும் என அனைவரும் ஜோடியாக தங்களின் மனைவியின் கர்ப்ப காலத்தை எண்ணி மனம் நெகிழ்ந்து இருப்பதை இந்த வீடியோ மூலம் உணர முடிகிறது.

Maternity shoot from kerala three generations family video gone viral

Images are subject to © copyright to their respective owners.

ஒவ்வொரு தலைமுறையிலும் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த Maternity வீடியோ அமைந்துள்ள சூழலில், பார்ப்போர் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருவதுடன் இணையத்தில் இந்த வீடியோ அதிகம் வைரல் ஆகியும் வருகிறது.

Also Read | "இது நாட்டு நாட்டு வெர்ஷன் 2.0".. மேட்ச் நடுவுல ஒன்னா நடனமாடிய ஹர்பஜன், சுரேஷ் ரெய்னா.. Trending வீடியோ!!

Tags : #KERALA #MATERNITY #MATERNITY SHOOT #THREE GENERATIONS FAMILY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Maternity shoot from kerala three generations family video gone viral | India News.