‘கண்ணீருடன் வெளியேறிய ஷிகர் தவான்..’ ரசிகர்களுக்குப் பகிர்ந்துள்ள உருக்கமான மெசேஜ்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 20, 2019 11:03 AM

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Shikhar dhawans emotional video after being ruled out of worldcup

உலகக் கோப்பை போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்தியாவின் துவக்க வீரர் ஷிகர் தவானுக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில்  இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஃபீல்டிங் செய்ய முடியாமல் போனது. பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு எலும்புமுறிவு இருப்பது தெரிய வந்ததால் தவான் 3 வாரங்களுக்கு போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் எதிர்பார்த்தபடி காயம் குணமடையாததால் எஞ்சியுள்ள தொடர்களிலும் தவான் பங்கேற்க மாட்டார் எனத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய ரசிகர்களுக்கு நன்றி சொல்லி உருக்கமான வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் தவான்.

அந்த வீடியோ பதிவில், “இந்த உலகக் கோப்பையில் இனிமேல் என்னால் தொடர முடியாது என்பதை உருக்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்பாராத விதமாக காயம் குறிப்பிட்ட நேரத்தில் குணமடையவில்லை. ஆனால் இந்திய அணி தொடர்ந்து செல்ல வேண்டும். எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #SHIKHARDHAWAN