‘தொடர் தோல்வியால் விரக்தியடைந்த வீரர்கள்..’ ஹோட்டலில் ஃபோட்டோ எடுத்தவர்களுடன் செய்த தகராறால் பரபரப்பு..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 19, 2019 06:08 PM

உலகக் கோப்பையில் தொடர் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் ஹோட்டல் சென்றபோது அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

Afghanistan players involved in restaurant fight in Manchester

உலகக் கோப்பை போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து. இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதால் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் விரக்தியில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து உடனான போட்டிக்கு முதல்நாள் இரவு ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் மான்செஸ்டர் நகரிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த சிலர் அவர்களை ஃபோட்டோ எடுக்க முயன்றுள்ளனர். இதனால் வீரர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீஸார் வீரர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதுபற்றி  மான்செஸ்டர் போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மான்செஸ்டர் நகரில் உள்ள அக்பர் ரெஸ்டாரன்டில் இரவு 11.15 மணியளவில் ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கும் பொதுமக்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. யாரையும் கைது செய்யவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #ENGVSAFG