'மது போதையில் காவலர்களுடன் சண்டையிட்ட நடிகை'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 03, 2019 03:27 PM

மதுபோதையில் காரை ஓட்டி வந்து காவலர்களுடன் சண்டையிட்ட நடிகையால் பரபரப்பு ஏற்பட்டது.அதன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Ruhi Shaileshkumar Singh has accused the police of assaulting her

மும்பையில் டிவி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகையும்,மாடலிங்யில் ஈடுபட்டு வருபவருமான  ரூகி சைலேஷ்குமார் சிங் ,கடந்த 31 ஆம் தேதி  தனது நண்பர்களுடன் இரவு பார்ட்டிக்கு சென்று விட்டு மும்பை பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள, மாலுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.ஆனால் அவர் குடித்திருந்ததால் அவரை மாலுக்குள் அனுமதிக்க மால் ஊழியர்கள் மறுத்து விட்டார்கள்.இதனால் ஆத்திரமடைந்த ரூகி மால் ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மால் ஊழியர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காததால் அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடிகை ரூகியை கண்டித்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அவர்,காவலர் ஒருவரின் சட்டையைப் பிடித்து தாக்கியதாகத் கூறப்படுகிறது.இதையடுத்து காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட விவகாரத்தில் ரூகி சிங்கின் நண்பர்கள் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மற்ற 2 நண்பர்களுடன் காரை எடுத்துச் சென்ற நடிகை ரூகி, சான்டாக்ரூஸ் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.இதுதொடர்பாக ரூகி சிங் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியது, ஊழியர்கள், காவலர்களை தாக்கியது ஆகிய பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நடிகை காவல்துறையினருடன் சண்டையிட்ட வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #RUHI SHAILESHKUMAR SINGH #DRUNK #MUMBAI #TV ACTOR