‘பெங்களூரு பறக்க ரெடியான விமானம்’.. ‘திடீரென ரன்வேயில் நுழைந்த நபர்’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 23, 2019 11:19 AM

மும்பை விமானநிலையத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் விமான ஓடுதளத்துக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Man scales Mumbai airport wall and walked up to a plane

மும்பை விமானநிலையத்தில் இருந்து பெங்களூருக்கு செல்வதற்காக ஓடுதளத்தில் விமானம் தயாராக இருந்துள்ளது. அப்போது திடீரென நபர் ஒருவர் விமான ஓடுதளத்துக்குள் நுழைந்துள்ளார். பின்னர் சர்வ சாதாரணமாக விமானத்தின் டயர்களை தட்டி சோதித்துப் பார்த்துள்ளார். இதனை அடுத்து ஆபத்தை உணராமல் விமானத்தின் என்ஜின் அருகே சென்றுள்ளார். இதனையறிந்த விமானத்தின் பைலட் உடனடியாக என்ஜினை ஆஃப் செய்துள்ளார். இதனால் பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது.

இதனை அடுத்து அங்கே வந்த விமானநிலைய அதிகாரிகள் அந்த நபரை அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் விமானநிலையத்தின் தென்பகுதி உள்ள சுவற்றில் ஏறி குதித்து உள்ளே வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் இருப்பதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MUMBAI #AIRPORT #WALL #RUNWAY #SPICEJET